திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அப்போதைய திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என இந்து முன்னணியினர் குற்றம்சாட்டினர்.
தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கார்த்திகை தீபத்தின்போது மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
















