ஒரு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், 750 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரயில்வே திட்டங்கள், துறைமுக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதேபோல சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடக்க விழாவின்போது முதலமைச்சர் விஜயின் கையைப் பிடித்து பிரதமர் மோடி திட்டங்களைத் தொடங்கிவைத்தது பெரும் வரவேற்பை பெற்றது.
















