திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Jan 14, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  குற்றம் சாட்டிஉள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில் அஸ்ரத் ஆக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனித நீர் தெளிப்பதற்காகக் குழந்தையுடன் தர்காவிற்கு வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்தி தாக்கியதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது என்றால் திமுக அரசையும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஒழுங்கையும் குற்றவாளிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்? அதிலும் அப்துல் அஜீஸ் மீது ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், அவர் தர்காவின் தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தைப் பற்றி திமுகவின் போலி பெண் போராளிகளும், பிற தலைவர்களும் இதுவரை வாய் திறக்காதது ஏன்? இஸ்லாமிய மக்களின் ஓட்டு வங்கி அடி வாங்கிவிடும் என்ற அச்சமா? அல்லது வழக்கம்போல இந்தப் பாலியல் வழக்கிலும் உடன்பிறப்புகள் ஒளிந்துள்ளனரா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமூகநீதி, மத நல்லிணக்கம் குறித்தெல்லாம் பிறருக்கு வகுப்பெடுக்கும் திமுக அரசு, இந்த விவகாரத்தை எவ்வித சமரசமுமின்றி அணுக வேண்டும் எனவும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலினை என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags: tn news todaySafety of women who attend prayers from school to mosque under DMK rule - Nainar Nagendran criticizesbjpDMKMK StalinTn newsநயினார் நாகேந்திரன் விமரசனம்
ShareTweetSendShare
Previous Post

சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!

Next Post

இறக்குமதி சார்பு நிலையை புறந்தள்ள முடிவு : 2027 பட்ஜெட்டில் சுதேசியை ஊக்குவிக்க புதிய திட்டம்?

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies