திருநீர்மலை ஏரியை சீரமைப்பதில் புதிய சர்ச்சை...தூர்வாரும் பணியில் முறைகேடா? -கேள்வி எழுப்பும் மக்கள்
Jun 13, 2026, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநீர்மலை ஏரியை சீரமைப்பதில் புதிய சர்ச்சை…தூர்வாரும் பணியில் முறைகேடா? -கேள்வி எழுப்பும் மக்கள்

Manikandan by Manikandan
Feb 25, 2026, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அருகே திருநீர்மலை பெரிய ஏரியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளின் போது, தூர்வார்தல் என்ற பெயரில் அதிகளவு மணல் அகற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்த இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை தேவை எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநீர்மலை பெரிய ஏரியில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், தற்போது பல புதிய சர்ச்சைகளை உருவாகியுள்ளன. ஏரியை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தூர்வாருவதாகக் கூறி அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஒருகாலத்தில் சுமார் 194 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த நீர்நிலை, தற்போது சுமார் 100 ஏக்கராகச் சுருங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் இருந்த ஏரியை சீரமைக்க, 5.15 கோடி ரூபாய் அளவிற்கு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டிய நிலையில், அடுத்தகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், ஏரிக்குள் தேங்கிய மணலை அகற்றும் பணிகள் சீரமைப்பு பணிகளை விட அதிக வேகமாக நடைபெற்று வருவதும், லாரிகளில் மணல் வெளியேற்றப்பட்டு வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சீரமைப்பு பணிகள் தாமதமாக தொடங்கியதும், முழுமையான திட்டமிடல் இல்லாமையும், ஏரியின் நீர்ப்பிடிப்பு திறனை பாதிக்கக்கூடும் என நீர்நிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சம்மந்தப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையம் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ, எம்.பி போன்ற மக்கள் பிரதிநிதிகள், இத்தகைய சுரண்டலை ஏன் கவனிக்கவில்லை என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன் காரணமாக சம்மந்தப்பட்ட பிரதிநிதிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீர் மேலாண்மை சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால், வரும் கோடைக் காலத்தில் நீர்வள ஆதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில் பொதுமக்கள் நிதியில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரி சீரமைப்பு என்ற பொதுநலத் திட்டம், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கனிமவள மேலாண்மை குறித்த முக்கிய விவாதமாக மாறியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் கண்காணிப்பு அவசியம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Tags: removedcarriedThirunirmalai lakeChennaiallegationssand
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஆணை – நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இபிஎஸ் முதலமைச்சராக வேண்டி அதிமுகவினர் பாதயாத்திரை!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies