கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டுமென முதலமைச்சர் விஜய்-க்கு We the Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், We the Leaders அமைப்பு சார்பில் பொதுமக்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், கோயில்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விதிகளை மீறி 129 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த 129 கடைகளையும் அரசு உடனடியாக மூட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
2019ம் ஆண்டு 14 புள்ளி 2 சதவீதமாக இருந்த மதுப் பழக்கம், 2026-ல் 23 புள்ளி 7 சதவீதமாக உயர்ந்துள்ளது தேசிய குடும்பநல ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும்,
இது மிகவும் கவலை அளிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்
















