தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தி உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலினும், உதயநிதியும் தங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்றால் அதனை சண்முகம் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.
“எடப்பாடி பழனிசாமிக்கு இனி எப்போதும் வெற்றி கிடைக்காது என்றும் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
















