மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா ஆகியோர் களமிறங்கினர்.
இரு தொகுதிகளிலும் தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஏற்கனவே அதிமுக வசம் இருந்த இரு தொகுதிகளிலும் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மதுராந்தகத்தில் 85.99 சதவீதமும், தாராபுரத்தில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த பொதுத்தேர்தலைவிட வாக்குப்பதிவு குறைந்துள்ளது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வாக்குப்பதிவு குறைந்தது யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் நிலவி வருகிறது.
வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை வெளியாகும் தேர்தல் முடிவை அரசியல் கட்சியினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுவதால், அதன் முடிவில் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















