மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கியது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா ஆகியோர் களமிறங்கினர்.
இரு தொகுதிகளிலும் தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஏற்கனவே அதிமுக வசம் இருந்த இரு தொகுதிகளிலும் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மதுராந்தகத்தில் 85.99 சதவீதமும், தாராபுரத்தில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த பொதுத்தேர்தலைவிட வாக்குப்பதிவு குறைந்துள்ளது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வாக்குப்பதிவு குறைந்தது யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில்,வாக்கு எண்ணிக்கை தொடங்க முதலே தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தாராபுரம் – தவெக முன்னிலை
14- வது சுற்று
1. சத்தியபாமா ( தவெக ) – 51253
2. சுகன்யா ( திமுக ) – 42390
3. பானுமதி ( அதிமுக ) – 32832
4. கார்த்திகா ( நாதக) – 4206
5. லட்சுமணன் ( சிபிஐ) -949
வாக்கு வித்தியாசம் – 7564
மதுராந்தகம் – தவெக முன்னிலை
13வது சுற்று
மரகதம் குமாரவேல், தவெக -46639
பரந்தாமன், திமுக – 33019
கணிதா சம்பத், அதிமுக – -28664
ஜானகி ராமன், நாதக – 1202
சுகந்தி, மா.கம்யூ – 962
















