திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Oct 8, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 8, 2026, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மருத்துவமனையின் வாசலுக்குள்ளும் மொழி அரசியலை இழுத்து வருவது, “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்ற நமது பெருமைக்குரிய அடையாளத்திற்கே களங்கம் ஏற்படுத்தும் செயல் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைக் கவர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அவ்வளவு பெரிய குற்றமா?

இது இந்தித் திணிப்பு குறித்த விவாதமே அல்ல. மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைத் தகவல், அதை வாங்கும் நோயாளிக்குப் புரிய வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியம்.

காலங்காலமாக மொழியை வைத்து அரசியல் செய்து வரும் திமுக, இதிலும் ஒரு சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்ற பெயரில், அவர்களின் அரசியலுக்கே அடிபணியும் வகையில், பயன்பாட்டிலிருந்த மருந்துக் கவர்களை அகற்றுவது, ஒரு பொறுப்புள்ள, மனிதாபிமானமிக்க அரசின் நடவடிக்கையாக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களிலிருந்து வந்து வாழ்ந்து, உழைத்து வரும் பல லட்சம் மக்களும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கடந்து, அவர்களுக்கும் சரியான மருத்துவத் தகவல், புரியும் வகையில் கிடைக்க வேண்டும்.

அதுவே அடிப்படை மனிதநேயம். தமிழின் உரிமையைப் பாதுகாப்பதையும், ஒரு நோயாளிக்கு அவர் புரியும் மொழியில் உயிர் காக்கும் தகவலை வழங்குவதையும் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்களாக மாற்றுவது அபத்தம். ஆக, திமுகவின் மலிவான மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது உள்ளபடியே வேதனை அளிக்கிறது என நயினார் தெரிவத்துள்ளார்.

Tags: nainar nagendran campaignmla nainar nagendranTVK governmentnainar nagendran plannainar nagendran livenainar nagendran controversyhindi issuehindi letters in tablet coverNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendran
Share
Tweet
SendShare
Previous Post

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies