டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக கூறி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகவும் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது காவல்துறையினரை தாக்கியதாகவும், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 6-ம் தேதி அனுமதியின்றி ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறி, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
















