எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, ராட்சத அலைகள் பாறைகளைத் தாண்டி சாலையில் சீறிப் பாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அர்னாப் புயலின் தாக்கத்தால் சென்னை எண்ணூர் பகுதியில் நேற்றிரவு கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் சாலையைத் தாண்டி சீறிப் பாய்ந்ததால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
இந்த ஆபத்தான சூழலிலும், பொதுமக்கள் பலர் சாலையில் திரண்டு செல்ஃபி எடுப்பதிலும், ரீல்ஸ் பதிவிடுவதிலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
















