இந்தியா இலங்கை உறவுப் பாலம்- தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

இந்தியா இலங்கை உறவுப் பாலம்- தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை

தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே உள்ள கலாச்சாரப் பாரம்பரியத்தை மீட்டுப் புதுப்பித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

Murugesan M by Murugesan M
Jul 21, 2023, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து பல திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே உள்ள கலாச்சாரப் பாரம்பரியத்தை மீட்டுப் புதுப்பித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து உரையாடினார். இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வு மேம்படவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், பல்வேறு திட்டங்களையும் நிதி உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நமது மத்திய அரசு, தொடர்ந்து செய்யவிருக்கும் பணிகள் குறித்து இந்த சந்திப்பில் முடிவாகின.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான விமானப் போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை தமிழர்கள் பகுதியில் சுற்றுலா, தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மற்றும் இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இலங்கையின் உள் நாட்டுப் போரினால் பாதிப்படைந்த இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில், சீரமைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகளை இலங்கை அரசு நிறைவேற்றவும், இலங்கைத் தமிழர்களின் அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் மாகாணசபைத் தேர்தலை நடத்துதல் என்ற தனது உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்றும், இலங்கை தமிழ் மக்கள் மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் இலங்கை அதிபரிடம் பாரதப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்தியா இலங்கை உறவு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவிலிருந்து தமிழர்கள், இலங்கையில் குடியேறி, 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இரு நாடுகளிடையேயான தூதரக உறவை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த கலாச்சார உறவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 75 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

Tags: k Annamalai Bjp
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் யு.பி.ஐ சேவையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி – பிரதமர் நரேந்திர மோடி

Next Post

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே சந்தித்தார்

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies