கூட்டணியில் வருபவர்கள் பிரதமர் நரேந்திரமோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை கதவுகள் திறந்து தான் இருக்கிறது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர்,
ஊழலுக்கு எதிராக அரசுக்கு சாராத அமலாக்க துறையும், சிபிஐயும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதை யாரும் தமிழ்நாட்டில் பேசமா மறுக்கிறார்கள். அதை விடுத்து அண்ணாமலை வெளியிட்ட குற்றசாட்டில் கமா, உள்ளதா ஃபுல் ஸ்டாப் உள்ளதா என்று விவாதம் செய்வதைத் தவிர்த்து குற்றச்சாட்டுகளைப் பார்க்க வேண்டும்.
இடியும் சிபிஐ பொறுத்தவரை தன்னாட்சியாக செயல்பட கூடிய அமைப்புகள் அவர்கள் முறையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் யாராக இருந்தாலும் ஒரு அமைப்பின் மீது, கண் வைத்துள்ளது அப்படி, ஏதேனும் செய்ய நினைத்தாலும் கூட எந்த வழக்கையும் மூட முடியாது. எல்லா வழக்கையும் நீதிமன்றம் கண்கொத்தி பாம்பாக பார்த்து வருகிறது. அமலாக்கத்துறையை பொறுத்தவரை எடுக்கக்கூடிய நடவடிக்கை எல்லாமே நடுநிலையாக உள்ளது. ஆனால் இதில் போலியானவர்கள் ஊழல் அடிப்படையில் வைத்து அரசியல் நடத்துபவர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவுடன் அமலாக்கத் துறையின் மீது குறை சொல்கிறார்கள். இதுதான் நடக்கக்கூடிய தவறான விஷயம்.
எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளதால் அமலாக்கத்துறை தேவை இல்லை என்று தான் கூறுவார். ஏனென்றால் மூன்றாவது சோதனை வந்துவிடும் என்ற பயம். கார்த்தி சிதம்பரத்தின் குடும்பமே ஊழல் செய்துள்ளது, அதனால் தான் அமலாக்கத்துறை வேண்டாம் என்றுதான் கூறுகிறார்கள். ஊழல் செய்து அமலாக்கத்துறையிடம் மாட்டிக்கொண்டவர்கள் அமலாக்கத்துறை வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். கார்த்தி சிதம்பரம் கூறுவதை பொறுத்த வரை அவருக்கு சரிதான் இப்படியாவது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கிறார்.
கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். கூட்டணியில் வருபவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும், நாடு ஒற்றுமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யார் வருகின்றார்களோ வரட்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை கதவுகள் திறந்து தான் இருக்கிறது என தெரிவித்தார்.