மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!
Sep 12, 2026, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 8, 2023, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக குக்கி சமூகத்தினருக்கும்,  மெயிட்டி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறைகள் நடந்து வருகிறது. இதனிடையே  பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்ற விசாரணைக்கு மணிப்பூர் மாநில டி.ஜி.பி. ராஜிவ் சிங் நேரில் ஆஜரானார். அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, மணிப்பூர் விவகாரத்தை மிகவும் கவனமுடன் கையாண்டு வருவதாகவும், இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மணிப்பூர் விவகாரத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆகவே, மேற்கண்ட விவகாரம் தொடர்பான ஒட்டுமொத்த விசாரணையையும் கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும்” என்று உத்தரவிட்டனர்.

அதன்படி, காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி ஜோஷி, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Tags: supreme courtjustice asha menonjustice shalini joshijustice gita mittal3 retired judgesmanipur issue
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி – ஜிசாட் -24

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தொடர் முழுவதும் இடைநீக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies