டில்லி உள்ள பிரகதி மைதானத்தில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில், நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி, அவர்களின் பணிகளை கேட்டறிந்தார். இந்திய ஜவுளி மற்றும் கைவினைக் களஞ்சிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, கைத்தறி துணியை அணிந்தவர்கள்,
சுதந்திரத்திற்குப் பிறகு கைத்தறித்துறைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கடந்த நூற்றாண்டில் வலுவாக இருந்த கைத்தறித் துறை, பிறகு சாகும் நிலைக்கு சென்று விட்டது. கைத்தறித் துறையை முந்தைய அரசுகள் புறக்கணித்தன, தாழ்வு மனப்பான்மை நிலைக்கு சென்றனர்.
ஆனால் பாஜ தலைமையிலான அரசு கைத்தறித்துறையை வலுப்படுத்தி வருகிறது. இத்துறைக்கு நிதியளித்து வருகிறோம் இதனால் தற்போது கைத்தறிக்கான தேவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகரித்து உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் கைத்தறி வர்த்தகம் 30 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1,30,000 கோடியாக அதிகரித்து உள்ளது.