திமுகவின் முடியாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் - அண்ணாமலை சூளுரை
May 18, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் முடியாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – அண்ணாமலை சூளுரை

Web Desk by Web Desk
Aug 9, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலுக்கு எதிரான  “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின்  பதினோராவது நாளான இன்று திருச்சுழியில்  தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். நடைபயணத்தின் நிறைவில், காரியபட்டியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில்,  பேசிய அண்ணாமலை,

“விருதுநகர் மாவட்டம் என்பது சாதாரன ஊர் கிடையாது, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர். சுதந்திரப்  போராட்டத்தின் போது வெவ்வேறு காலகட்டத்தில் 3000 நாட்கள் கிட்டத்தட்ட, ஒன்பது ஆண்டுகள் காமராஜர் சிறையில் இருந்தார். பின்னாளில், முதலமைச்சரான காமராஜர், ஏழைகளின் நாயகனாக, விவசாயிகளுக்கு உற்ற தோழனாக, சுமார் 12 அணைகளைக் கட்டினார்.

இந்த திருச்சுழி மாபெரும் புகழ் பெற்ற இரமண மகரிஷி பிறந்த ஊர்.  இராமேஸ்வரத்திற்கு அடுத்து, இங்குள்ள பூமிநாதஸ்வாமி  திருக்கோயில் மிக முக்கிய கோயிலாக உள்ளது. சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் இருந்து பொடி நடையாக வந்தபோது, குண்டாற்றில் வெள்ளத்தின் காரணமாக இங்குள்ள பூமிநாதஸ்வாமி  திருக்கோவிலில், மூன்று நாட்கள் தங்கி இருந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. இப்படிச் சரித்திரம் வாய்ந்த திருச்சுழி வந்திருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிளையும், எல்லா ஊர்களையும் பார்க்கின்ற பொழுது திருச்சுழி அடிப்படையிலே மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. ஆனால் தமிழகத்திலே எப்பொழுதும் புன் சிரிப்புடன் இருக்கின்ற மக்கள் வாழ்கின்ற பகுதி திருச்சுழி.

இந்த இடத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்குப்  பாத யாத்திரையாக வரும்போது, அனைத்து மக்களும் புன் சிரிப்புடன் வரவேற்றனர். அதே நேரத்தில் வறுமை தாண்டவம் ஆடுவதையும்  இங்கே பார்க்க முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள 27 மாநிலங்களில் மிகவும் பின்தங்கிய 112 மாவட்டங்களைத்  தேர்வு செய்தார்.
இதில் இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டம் தமிழகத்தை சேர்ந்தவை. இந்த இரண்டு பின் தங்கிய மாவட்டங்களையும்  மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில்  உள்ளது.

விருதுநகர் மாவட்டம் பின்னோக்கி இருப்பதற்கு காரணம் திருச்சுழி, இங்கு அடிப்படை வசதிகள் மிக மிக குறைவு, தமிழக அரசு மக்களுக்காக செய்திருக்க பணிகள் மிக மிக குறைவு, அதனால் தான் வறுமை, திருச்சுழியில் கோரத்தாண்டவம் ஆடுகிறது.

இங்கே உள்ள அரசியல்வாதிகள் உங்களைப்  பயன்படுத்துகிறார்கள் என்ற  கோபம் எனக்கு உள்ளது. உங்களுடைய நேர்மையை, உங்களுடைய அன்பை உங்களுடைய உண்மையை இங்கே வரக்கூடிய அரசியல்வாதிகள் வாக்கை மட்டும் வாங்கிக்கொண்டு, உங்களுடைய பகுதியைப் பின்தங்கிய ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்களோ என்று நியாயமான கேள்வி வருகிறது.

ஒரே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில், இந்த தொகுதி இருக்கிறது. அப்பா, மகன், குறிப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை அமைச்சராகவும் இருக்கிறார். தென் சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சர் தங்கம் தென்னரசின் சகோதரி இருக்கிறார். அருப்புக்கோட்டை, தென் சென்னை, திருச்சுழி ஆகிய தொகுதியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மாறி, மாறி இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதியை எடுத்து பார்த்தோமானால், அடிப்படை வசதிகள் மிக மிக குறைவாக இருக்கக் கூடிய தொகுதியாக திருச்சுழி உள்ளது. இந்த தொகுதியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பூஜ்ஜியமாகும். வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் இளைஞர்கள் இந்த ஊரை தாண்டி வெளியே செல்கிறார்கள்.

இங்கே பார்க்கும் போது ஒரு சில வீடுகளில் கூரையே இல்லாமல் வயதானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது நிதி அமைச்சரின் தொகுதியாக இருக்கிறது என்று தெரியவரும்  போது கோபமும் ஆத்திரமும்தான்  வருகிறது.

2018 ஆம் ஆண்டில் நேரடியாக மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் கண்காணிக்கும் பொழுது, மருத்துவமனையில் பிரசவம் என்பது 89 சதவீதமாகவும், 11 சதவீதம் வீட்டிலே பிரசவம் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதனைக் கருத்தில் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு கண்காணித்த பின், நூறு சதவீதம் மருத்துவமனையில் குழந்தைப்  பிரசவம் நடைபெறுகிறது. பிறந்த குழந்தைக்கு ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது 2018 ஆம் ஆண்டு 55 சதவீதமாக இருந்தது. தற்போது 99 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எடை குறைவு 2018 ஆம் ஆண்டு 10 சதவீதம் இருந்தது, 2023 ஆம் ஆண்டு 3.49 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் வெறும் 87 சதவீதம் பள்ளிகளில் தான் பெண்களுக்கு கழிவறை இருந்தது, 2023-ல் 100 சதவீதம் பள்ளிகளில் பெண்களுக்கு கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலன் திருச்சுழியில் 2018 ஆம் ஆண்டின் படி நீர்நிலைகள் 858 ஆக இருந்ததை, மத்திய அரசின் சிறப்புக் கண்காணிப்பினால் 2023 ஆம் ஆண்டு 2111 ஆக நீர்நிலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூலம் விருதுநகர் மாவட்டத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகள் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் உள்ள கிராமப்புறங்களில் 2018 ஆம் ஆண்டு 25 சதவீத சிமெண்ட் வீடுகள் இருந்தது, 2023- ம் ஆண்டில் 93 சதவீத சிமெண்ட் வீடுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசின் சிறப்பான கவனத்தை தருகிறது.

2017 ஆம் ஆண்டு மொழிப் பாடத்தில் குழந்தைகள் பெற்றிருக்கிற சராசரி மதிப்பெண் 58 சதவீதமும், இன்று மொழிப் பாடத்தில் குழந்தைகள் பெற்றிருக்கின்ற சராசரி மதிப்பெண் 94 சதவீதமாக உள்ளது. கணிதப் பாடத்தில் 2017 ஆம் ஆண்டு குழந்தைகள் பெற்றிருக்கிற சராசரி மதிப்பெண் 46 சதவீதமாக இருந்தது. தற்போது 2023-ல் கணிதப் பாடத்தில் குழந்தைகள் பெற்றிருக்கின்ற சராசரி மதிப்பெண் 76 சதவீதமாகும்.

இதையெல்லாம் தாண்டி நீங்கள் பெருமைப்படக்கூடிய செய்தி என்னவென்றால்,112 பின்தங்கிய மாவட்டங்களில் இருந்த விருதுநகரை நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதன்மை மாவட்டமாக உயர்த்தி இருக்கிறது.

மாவட்டத்தில் குறையில்லை, மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்களிடமும் குறையில்லை, ஆட்சியாளர்கள் சரியாக இருந்திருந்தால் விருதுநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக மாறும் என்பதற்கு இது சான்று.

2018 ஆம் ஆண்டு நிதி ஆயோக் மூலம் இந்த மாவட்டத்தைக் கையில் எடுத்து, நான்கு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மாற்றிக் காட்டி இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியிலே 1967லிருந்து தொடர்ச்சியாக பின்தங்கிய மாவட்டமாக இருப்பதற்கு என்ன காரணம்?

திமுகவில் ஒரே குடும்பம், மன்னராட்சி, முடி ஆட்சியை போல, அவருடைய குழந்தை இங்கே இருப்பதற்கா? இதனால் மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசிடம் நான் கேட்கிறேன், முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்று வந்தவுடன் பத்ரிக்கையாளரை சந்தித்து பேசினார், ரூ 6100 கோடி கொண்டு வந்திருக்கிறேன் என செய்தியாளிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் அருகில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திருச்சுழிக்கு 50 கோடி வருகிறதா என அவர் கேட்டிருக்க வேண்டும். துபாயில் இருந்து இரண்டு ரூபாய் கூட வரவில்லை அது வேற கணக்கு, முதல்வர் ஸ்டாலின் ஏன் துபாய்க்கு சென்றால் என்பது வேறு கணக்கு. திருச்சுழி தொகுதிக்கு 50 கோடி ரூபாயில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்றும் அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டு இருக்க வேண்டும். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை.

இதனால் திருச்சுழியை பொறுத்தவரை இனி நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திருச்சுழி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இரவும் பகலமாக உழைத்து கொண்டிருக்கிறார். திமுக அமைச்சர்களுக்கு நான் சவால் விடுகிறேன், இன்றைக்கு திருச்சுழி கொஞ்சமாவது முன்னேறி உள்ளது என்றால் அதற்குக் காரணம் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் யாரும் கிடையாது என்று நேரடியாக இங்கிருந்து சவால் விடுகிறேன்.

2018 இல் இருந்து மத்திய அரசு என்ன செய்தது என்றும் திமுக என்ன செய்தது என்ற தரவு அடிப்படையில் நான் பேசுகிறேன். திமுகவின் திராவிட மாடல் அரசை பொறுத்தவரையில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர வேறு வேலை அவர்களுக்கு கிடையாது. இந்தத் தொகுதி மிகவும் பின்தங்கியுள்ளது, இதனை மாற்றி முன்னேறும் தொகுதியாக இதனை மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஒரே குடும்பத்திற்கு, நாம் ஓட்டு போடுவதால் எந்த பயனும் இல்லை. 25, 30 வருடமாக ஓட்டு போட்டு பார்த்து விட்டீர்கள்.

நான்கு வருடங்கள் மத்திய அரசு திருச்சுழிக்கு பணம் வழங்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லட்டும், விருதுநகருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பணம் வழங்கவில்லை என சொல்லட்டும், இன்றைக்கு திருச்சுழி கொஞ்சமாக முன்னேறி உள்ளது என்றால் அதற்குக் காரணம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். காமராஜரின் ஆட்சிக்குப் பிறகு, 1967இல் பிறகு, குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம், காமராஜர் பிறந்த ஊரை, இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக மாற்றி, அதை மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், காமராஜரின் சாபம் இவர்களை சும்மா விடாது, எப்படி இருந்த ஊரை எப்படி நாசம் செய்திருக்கிறார்கள். திமுக, அரசியலுக்காக ஜாதி வன்முறையை தூண்டி, பிற்படுத்த பட்ட தொகுதியாக வைத்து, ஓட்டுக்கு பணம் கொடுத்து, அதன் மூலம் வெற்றி பெற்று, மக்களுக்கு எந்த வித திட்டமும் கொண்டு வராமல் இன்றைக்கு விருதுநகரும், திருச்சுழியும் உள்ளது.

மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக்  கொண்டாட 12 அரசுத் துறையை நியமித்து, அதற்காக ஒவ்வொரு துறைக்கும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.  ஆரம்பகட்ட வேலைக்கு மட்டுமே 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கருணாநிதியின் பேனா சிலை வைக்க 84 ரூபாய் கோடி ஒதுக்கியும், மதுரையில் அவருக்கு நூலகத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியும் இருக்கும் தமிழக அரசு இந்த தொகுதிக்கு என்ன செய்திருக்கிறது?.

ஆனால், திருச்சுழியில், கடந்த வருடம் தொடங்குவதாக சொன்ன கலைக்கல்லூரிக்கு, இடமில்லாமல் ஒரு  பள்ளிக்கூடத்தில் கலை அறிவியல் கல்லூரிக்கான பெயர் பலகை வைத்து  திறக்கப்பட்டுள்ளது. திருச்சுழியில் கலை அறிவியல் கல்லூரி கட்டிடம் திறக்க காலதாமதமானதால் ஒரு பள்ளியில், அரசு கல்லூரியை திறந்து வைத்த நீங்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி குறை சொல்கிறீர்களா?

வருகின்ற 2026 மே மாதத்தில் மதுரை எய்ம்ஸ், மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஏற்கனவே திறக்கப்பட்டு 150 மாணவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கும் விருதுநகருக்கு மருத்துவக் கல்லூரியை இதுவரை யாரும் வழங்கவில்லை, ஆனால் விருதுநகரில் முதல் முதலில் மருத்துவக் கல்லூரியைப்  பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். ஒரே நேரத்தில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

எத்தனை நாளைக்குப்  பொய் சொல்லி திரிவீர்கள்? இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். கே கே எஸ் எஸ் ஆர் அமைச்சரிடம் மனு கொடுத்தால், காகிதத்தால் தலையில் அடிப்பார். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால், செல்லமாக அடித்ததாக சொல்கிறார். யாராவது இவர்தான் வீட்டுக்கு சென்றால், கை கட்டிக்கொண்டு, நிற்க வேண்டும் அவர் நாற்காளியில் அமர்ந்திருப்பார், இவர்களெல்லாம் மன்னர் என்ற நினைப்பு, நாமெல்லாம் சாதாரண மக்கள் அல்லவா?

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், மகன் பேரன் பேரக்குழந்தை சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஆகிக்கொண்டிருப்பார்கள். இதற்கு திராவிட மாடல் அரசு என்று பெயர்.

30 ஆண்டுகளாக திமுக திருச்சுழியை மிகவும் பின்தங்கிய தொகுதியாக மாற்றி உள்ளது. ஏழை மக்கள் அதிகம் உள்ள தொகுதியாக உள்ளது.

இந்த யாத்திரை மூலம் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களுக்கு வேலை செய்யக்கூடிய ஊழியன் இங்கிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஊழியன் இங்கு வேண்டும்.
பாஜக கூட்டத்திற்குச்  சென்றால் , 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுக்க மறுப்பது, ஓய்வூதியப்  பணத்தைத்  தர மறுப்பது, வீடு வீடாக சென்று திமுகவினர், மிரட்டி உள்ளனர். மக்களை மிரட்டுவதை இத்தோடு விட்டுவிட வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்கள் வீட்டுக்குச்  சென்று விட்டதா? என்று, பார்த்திருந்தால் தொகுதி, முன்னேறியிருக்கும். இன்னும் மன்னர் ஆட்சி போல எத்தனை நாளைக்கு வீடு வீடாக சென்று மிரட்டுவீர்கள்.

தொகுதி மக்களாகிய நீங்கள் மாற்றம் வேண்டும் என்று நினைத்து விட்டீர்கள். மாற்றம் நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து விட்டீர்கள். 2018 ஆம் ஆண்டிலிருந்து விருதுநகர் திருச்சுழிக்கு, செய்யக்கூடிய நல்ல விஷயங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிக்  கடனாக அவருக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டீர்கள்.

திராவிட மாடல் ஆட்சியிலே, ஒரு குடும்பம் சாராய ஆலை  நடத்துவதற்காக டாஸ்மார்க் கடை தேவைப்படுகிறது, 5500 கடைகளில் மூலம் மாதத்திற்கு டாஸ்மாக் கடையிலே 52 லட்சம் பெட்டிகள் விற்பனையாகிறது. இதில் 40 சதவீதம், டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பி ராஜா ஆகியோர் சாராய ஆலையிலிருந்து சாராயம் வருகிறது.

புழுத்துப் போன தொழுநோயாளிகளின் கையில் உள்ள வெண்ணெயை ஸ்டாலின் நக்கி நக்கி சாப்பிடுகிறார். இதைவிட மோசமாக திராவிட மாடல் ஆட்சியைப்  பேச முடியாது. இராஜாஜி, கருணாநிதியிடம் கையெடுத்து கும்பிட்டு, என்ன நடந்தாலும் மது விலக்கை மட்டும் ரத்து செய்யாதீர்கள், தமிழகம் பின்னோக்கிச் சென்று விடும் என வேண்டினார். இதற்கு அடுத்த நாள் கருணாநிதி மதுக்கடைகளைத்  திறக்க கையெழுத்து போட்டு, இன்றைக்கு மொத்தமாக தமிழ்நாட்டை குட்டிச்சுவராக மாற்றி, குடிகார மாநிலமாக மாற்றி, கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளார்.

இந்தியாவிலேயே அதிகம்  கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்  தமிழகம் கடன் வங்கி இருக்கிறது.  திமுகவிற்கு ஓட்டு போட்டதற்கு ஒவ்வொரு தமிழனின்  தலையிலும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. திமுக உங்களுக்கு அளித்த பரிசு இந்த கடன். இங்கே பிறந்த குழந்தையின் தலையில் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது, இதுதான் திராவிட மாடலின் சாதனையாக உள்ளது.

இதனை ஒழித்துக் கட்ட வேண்டிய கட்டாயம் இங்கு உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. குறிப்பாக, காரியபட்டி, திருச்சுழியில்  இருக்கிறவர்கள் திமுகவை ஒழித்துக் கட்ட சபதம் எடுக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ளது, உங்களுடைய வாக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்க வேண்டும்.
மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக நீங்கள் அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் . நல்லவருக்கு வாக்களியுங்கள் உங்களுக்காக வேலை செய்பவர்களுக்கு வாக்களியுங்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடியை வலுப்படுத்த வேண்டும்” என்று முழங்கினார்.

Tags: bjpTamilNadu BjpannamalaiEn man En makkalannamalai bjp
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!

Next Post

நேபாளத்தில் கனமழை – 38 பேர் பலி, 33 பேர் மாயம்…

Related News

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies