தென்மேற்கு பருவ மழை, வட மாநிலங்களில் வலு குறைந்துள்ளதன் காரணமாக தென் மாநிலங்களில், பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் எனவும் கடந்த ஜூன் மாதம் 1 முதல், ஆகஸ்ட் .14 வரை தமிழகத்தில் இயல்பாக ,15 செ.மீ மழை பெய்ய வேண்டும் ஆனால் 6 சதவீதம் கூடுதலாக 16 செ.மீ , மழை பெய்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சிக் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இன்று பகல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.