கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (டிவிட்டர்) பதிவில்,
திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை பகுதியில், கடலில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், துரதிருஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். குழந்தைகளைப் பிரிந்து வாடும் அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை பகுதியில், கடலில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், துரதிருஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். குழந்தைகளைப் பிரிந்து வாடும் அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த…
— K.Annamalai (@annamalai_k) August 16, 2023
மாணவர்கள், நீர் நிலைகளுக்குச் செல்லும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்றும், பெரியவர்கள் துணையின்றி, நீர் நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.