இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்தை நோக்கி லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 11-ஆம் அனுப்பியது. இந்த விண்கலம் இந்தியாவின் சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்கும் முன்னரே லூனா-25 தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நாட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து, சரியான இலக்கை தேர்வு செய்து, நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். உலக வரலாற்றில் நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவை நெருங்கியுள்ளது. சுமார் 100 கி.மீட்டர் தூரத்தில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மெதுவாக சந்திரயான்-3 தரையிறங்க உள்ளது.