ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உலகத் தடகள சாம்பியன்ஷிப்பியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சோப்ரா தனது சிறிய தவற்றால் தங்க பதக்கத்தை தவறவிட்டார், ஆனால் இந்த ஆண்டு அந்த தவறை சரி செய்து தனது இரண்டாவது முயற்சியில் 88.17 மீ எறிந்து உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கத்தை தனதாக்கினார். 25 வயதான நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
The talented @Neeraj_chopra1 exemplifies excellence. His dedication, precision and passion make him not just a champion in athletics but a symbol of unparalleled excellence in the entire sports world. Congrats to him for winning the Gold at the World Athletics Championships. pic.twitter.com/KsOsGmScER
— Narendra Modi (@narendramodi) August 28, 2023
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், விளையாட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையளமாக ஆக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
It is a matter of great national pride that three Indians, Neeraj Chopra, D.P. Manu and Kishore Jena together competed in the final round of the World Athletics Championships 2023 javelin event and they finished in the top six. I congratulate each one of them.
— President of India (@rashtrapatibhvn) August 28, 2023
அவரை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் “நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்கள் என்று, இந்திய விளையாட்டு சாதனைப் பக்கத்தில் மேலும் தங்க பக்கத்தை இணைத்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.