ஜி20 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!
Sep 13, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி20 மாநாட்டால் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு முன்னேற்பாட்டுப் பணிகளும், பாதுகாப்புப் பணிகளும் துரித கதியில் நடந்து வருகிறது. அந்த வகையில், ஜி20 தலைமைத்துவத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் 9-வது கூட்டம் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி 20 செயலகம் மற்றும் வெளியுறவு, உள்துறை, கலாச்சாரம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்கள், தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ஜி20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள், நெறிமுறை, பாதுகாப்பு மற்றும் ஊடகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து முதன்மைச் செயலாளர் ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முதன்மைச் செயலருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கினர். மேலும், பொதுமக்களுக்கான போக்குவரத்து ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். அதேபோல, நகரில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல, ஜி20 உச்சி மாநாட்டிற்காக, பாரத் மண்டபத்தில் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தனித்துவமான இந்திய அனுபவத்திற்காக, கலாச்சாரம் மற்றும் ‘ஜனநாயகத்தின் தாய்’ குறித்த கண்காட்சிகள் பாரத் மண்டபத்தில் அமைக்கப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்த முதன்மைச் செயலாளர், நடராஜர் சிலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிகழ்ச்சி குறித்தும் ஆய்வு செய்தார்.

இது ஒருபுறம் இருக்க, முதன்முறையாக ‘ஜி 20 இந்தியா’ என்ற மொபைல் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம், பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘புதுமை கண்டுபிடிப்பு மையம்’ மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா பரிசோதனை மையம்’ மூலம் ஜி20 பிரதிநிதிகள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் டிஜிட்டல் இந்தியாவை நேரடியாகக் காண்பார்கள். மேலும், லாஜிஸ்டிக்ஸ் தரப்பில் பயிற்சிகள் நடத்தப்பட்டு, வரும் நாட்களில் ஆடை ஒத்திகைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

Tags: G20
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.

Next Post

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies