லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி - ரூ.3.50 லட்சம் பறிமுதல்
Oct 7, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 10:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப்  பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில்  உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதா (வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அவர், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம், லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, லஞ்ச பணத்தை, நேரடியாக வாங்கினால், சிக்கிக் கொள்வோம் என டிஜிட்டல் முறையில், அதாவது, ஜி பே, போன் பே மூலமாக மட்டுமே வாங்குவது வழக்கம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே, நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வாராம். இது தொடர்பான புகார், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால், அவரைப்  பிடிக்க பொறிவைத்தனர்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்  தேவநாதன் தலைமையில் ஆய்வாளாகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர், விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ளே நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திய போது, உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் மனைகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தாரிடம் இருந்து, சங்கீதா லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, காவல்துறையினர், உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவையும் அவருக்கு உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர் உதயகுமார் (வயது 37) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: davcanti corruptionviruthachalam policepolicesub register
Share
Tweet
SendShare
Previous Post

சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன்!

Next Post

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies