கோவை கார் குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது!
Apr 29, 2026, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை கார் குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 2, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்த ஜமேஷா முபின் காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் தான் தீட்டிய சதியில் தானே சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான முபினுடன் நெருங்கி பழகியவர்கள், கார் வாங்கி கொடுத்தவர்கள், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தவர்கள், சதி திட்டம் தீட்டியவர்கள் என இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் கோவை உக்கடம் அன்புநகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (36) என்பவருக்கு கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சில காலம் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயிலில் இருந்தாலும் இவருக்கு கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருந்ததை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பேரிலேயே நேற்று முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  முகமது அசாருதீன் (36) சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் இன்று(02-09-2023) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கைதான முகமது அசாருதீன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் ஜஹ்ரான் பின் காசிம் என்பவர். ஐ.எஸ். சித்தாந்த எண்ணம் கொண்ட இவரால் தற்போது கைதாகி உள்ள முகமது அசாருதீன் ஈர்க்கப்பட்டு உள்ளார்.

அதன்பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அவருடன் அசாருதீன் தொடர்பில் இருந்துள்ளார். இலங்கை குண்டுவெடிப்புக்கு பின் ஐ.எஸ். ஆதரவாளர்களை பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் தென்னிந்தியா முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் முகமது அசாருதீன் சிக்கினார்.

அவர் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விய்யூரில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் மற்றும் 2 கூட்டாளிகள் கேரள ஜெயிலில் இருந்து அசாருதீனை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர். அப்போது கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும் சத்தியமங்கலம் காட்டில் முபினும், அவரது கூட்டாளிகளும் ரகசிய கூட்டம் நடத்தி கார் குண்டுவெடிப்பு பற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது கேரள சிறையை தகர்த்து முகமது அசாருதீனை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் எனவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது ஆவார்கள் என தெரிகிறது.

 

Tags: Niacoimbatore car blastcimbatore terror attack
ShareTweetSendShare
Previous Post

ஜாமீன் கேட்டு கோர்ட் கோர்ட்டாக அலையும் செந்தில் பாலாஜி !

Next Post

இரும்பு அல்லாத 7 உலோகப் பொருட்களுக்கு 3 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள்: மத்திய அரசு அறிவிப்பு!  

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies