"பாரத்" பெயர் மாற்றம்: ஐ.நா. கருத்து!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பாரத்” பெயர் மாற்றம்: ஐ.நா. கருத்து!

கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“பாரத்” என்ற பெயர் மாற்றம் தொடர்பாக, இந்தியாவிடமிருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

நாட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம் “இந்தியா”, “பாரத்” பெயர் மாற்றம். அதாவது, வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். இவர்களை கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

இந்த விருந்து தொடர்பாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பிதழில் “தி பிரசிடென்ட் ஆஃப் இந்தியா” என்பதற்கு பதிலாக “தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

அதேபோல, இந்தோனேஷியாவில் ஆசியான் இந்தியா மாநாடும், கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு  இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றார். இவரது பயணம் தொடர்பான அழைப்பிதழிலும், “தி பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா” என்பதற்கு பதிலாக “தி பிரைம் மினிஸ்டர் ஆஃப் பாரத்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்தியாவின் பெயரை பாரத் என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மாற்றப் போவதாகவும், இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், வரும் 18-ம் தேதி நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வதந்தியை கிளப்பி விட்டன. இதனால், நாட்டில் ஒருவித அசாதாரண சூழல் நிலவியது.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, பியூஸ் கோயல் ஆகியோர் இது வெறும் வதந்தி என்று தெளிவுபடுத்தினர். அதேசமயம், நாட்டிலுள்ள பல்வேறு பிரபலங்கள் “பாரத்” பெயர் மாற்றத்திற்கு அமோக ஆதரவைத் தெரிவித்தனர். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆதரவு தெரிவித்து கருத்துப் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “துருக்கி நாடு துருகியே என்று கடந்த வருடம் பெயர் மாற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு அரசிடம் இருந்து முறைப்படி எங்களுக்கு கோரிக்கை வந்தது. அதனடிப்படையில் பெயர் மாற்றப்பட்டது. அதேபோல், இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் பரிசீலிப்போம்” என்று தெரிவித்ததாக, ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியிருக்கிறார்.

Tags: IndiaBHARATHNAME CHANGEU.N.
Share
Tweet
SendShare
Previous Post

பொருளாதாரக் குற்றவாளிகளிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது!-ஜிதேந்திர சிங்

Next Post

சனாதனம்: ஆ.ராசாவுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies