திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ளது ஓணாங்குட்டை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 45 பேர், கடந்த 8-ம் தேதி 2 வேன்களில், கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவுக்குச் சுற்றுலா சென்றனர்.

2 நாள்கள் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு ஊர் திரும்பியுள்ளனர்.  அதிகாலை, பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்துள்ள சண்டியூரில் வேனின் டயர் பஞ்சரானது. இதனால், சாலையில் ஒரு பக்கமாக வேனை நிறுத்தி, வேன் ஓட்டுநர் அதனைச் சரி செய்து கொண்டிருந்தார்.

வேனிலிருந்த பெண்கள் கீழே இறங்கிவந்து, சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், சென்டர் மீடியனில் அமர்ந்திருந்த 7 பேர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் துடிதுடித்து பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ள பாரத பிரதமர் மோடி, திருப்பத்தூர் சாலை விபத்தால் வேதனையுற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றும்,

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50000 பிரதமரின் தேசிய பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்கியப் பாரத பிரதமர் மோடிக்கு, அப்பகுதி மக்கள் கருணை உள்ளம் கொண்டவர் மோடி என புகழாராம் சூட்டியுள்ளார்.

 

Tags: pm modi condolence
Share
Tweet
SendShare
Previous Post

ஜி20 மாநாட்டில் இசை மழை: சாதனை படைத்த தமிழக கலைஞர்கள்

Next Post

கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies