சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?
Sep 12, 2026, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 05:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்து மதம் பற்றி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் விமல் என்பவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பொன்விழா ஆண்டு நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு என்பவர் 96 சதவீத இந்துக்களுக்குக் கல்வியை மறுத்தது தான் சனாதனம் என்றும், சனாதனம் என்றால் 4 சதவீத மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும் என்றும், 4 சதவீதத்தைத் தவிர்த்துப் பார்த்தால் 94 சதவீத இந்துக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவ மக்கள் கூடியிருந்த சபையில் இந்து மதத்தை இழிவாகப் பேசி மத விழிப்புணர்வைத் தூண்டும் வகையிலும், பிற மதத்தினுடைய இந்து மதத்தை இழிவாகப் பேசியும், இரு தரப்பினுடைய கலவரம் உண்டு பண்ணும் வகையிலும், நாட்டில் சட்டம், ஒழுங்கு அமைதியைச் சீர் குலைக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

மேற்படி, அப்பாவு என்பவரின் இந்த பேச்சை முன்னிலைப்படுத்தி, இஸ்லாமியர்கள் சமூக வலைதளங்கில், இந்து மதம் குறித்து இழிவாகப் பேசி வருகின்றனர்.

மேலும், இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் அப்பாவு பேசியது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாவு, இந்து மதத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசியது குறித்து இந்துக்கள் பலர் என்னிடம் வேதனை தெரிவித்தனர்.

மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில், பேசிய சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, அமைதியையும், நீதியையும் நிலைநாட்டுமாறு வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, விமலுடன், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.

அப்போது, காவல் ஆய்வாளர் பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளதால், புகார் மனு மீது, உடனே ரசீது கொடுக்க முடியாது, இன்று மாலை வந்து ஆய்வாளரிடம் பேசுங்க என காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: sanatan dharmaappavu dmk mla
Share
Tweet
SendShare
Previous Post

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 3 பேர் சுட்டுக்கொலை!

Next Post

ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies