ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !
Sep 13, 2026, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 08:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவினர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பிரிவினைவாதம் பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில், சனாதனம் குறித்த அவதூறு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சனாதனம் என்பது தொன்மையான தர்மம். தமிழக அரசின் பாடப்புத்தகத்திலும் கூட, அது குறித்து மிகத் தெளிவாக உள்ளது. ஆனால், மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம் என்றெல்லாம் கூறியவர்கள், அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் பின்வாங்குகிறார்கள்.

திருவாரூரில் உள்ள திருவிக கல்லூரியில் சனாதனத்தை எதிர்த்துப் பேசுவதற்கான சுற்றறிக்கையே அனுப்பி உள்ளனர். இது தவறான முன்னுதாரணம். திலகர் காலத்தில் ஹிந்து சமய ஒற்றுமை விழாவாக நடந்த விநாயகர் ஊர்வலம், தற்போது வரை பன்னெடும் காலமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், லஞ்சம் ஊழல், சட்டம் ஒழுங்கு, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. அந்த தோல்வியைத் திசை திருப்பவே, ஹிந்து கலாச்சாரத்துக்குத் தடை விதிக்கின்றனர்.

திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றும் பேசிய ஈ.வெ.ரா., போன்றவர்களைக் கைது செய்யவில்லை. ஆனால், ஆன்மீக பேச்சாளர் மணியன், திருவள்ளுவரின் உண்மை விசயங்களை எடுத்துப் பேசியதற்காக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதிலிருந்தே, திமுகவினர் ஹிந்து தர்மத்தின் மீதும், பிராமணர்கள் மீதும் எந்த அளவு வெறுப்புணர்வோடு செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஆ.ராசா, உதயநிதி போன்றவர்கள் வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு பிரிவினை பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான். திராவிட மாடல் ஆட்சியாளர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர். இதை நான் சொல்லவில்லை. உலகமே சொல்கிறது.

ஜனநாயகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஆட்சிப் பொறுப்பிலும், அதிகாரத்திலும் இருப்பதால், திமுகவினர் அடக்குமுறை நடவடிக்கைகளை கையாளுகின்றனர். அவர்களுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Tags: tamilnaduajun sambath
Share
Tweet
SendShare
Previous Post

நாடகத்தை நிறுத்துங்கப்பா! – திமுகவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை!

Next Post

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies