'ஒரே நாடு, ஒரே தேர்தல்': 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார்.

தற்போது, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பண விரையமும், கால விரையமும், மனித உடல் உழைப்பு விரையமும் ஏற்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம் முதல் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வரை அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி வைத்த கோரிக்கையை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆதரித்தார். 2018-ம் ஆண்டு நாடாளுமன்த்தில் பேசிய ராம்நாத் கோவிந்த், “அடிக்கடி தேர்தல்கள் மனித வளத்தின் மீது பெரும் சுமையை சுமத்துவது மட்டுமல்லாமல், மாதிரி நடத்தை விதிகளை பிரகடனப்படுத்துவதால் வளர்ச்சி செயல்முறையையும் தடுக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், மேற்கண்ட கமிட்டிகள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனால், ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராமலேயே இருந்தது.

இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். தவிர, சிறப்பு அழைப்பாளராக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் உறுப்பினர் பதவியை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று, அக்குழுவின் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார். ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த், செய்தியாளர்களிடம் கூறுகையில் இத்தகவலை தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில், மக்களவை, மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags: one nation one electionseptember 23first meetingcommittee
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!

Next Post

சிறப்புக் கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies