விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!
Sep 14, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Murugesan M by Murugesan M
Sep 18, 2023, 04:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாகவும், வினை தீர்க்கும் தெய்வமாக விளங்கும்  விநாயகர், பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று விநாயகப் பெருமானை வழிபட்டு செல்கின்றனர். தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்துக்கும் மேலான  இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்த கேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சென்னையில், புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் குவிந்துள்ளன. வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மலை உச்சியில் உள்ள விநாயகருக்கு இன்று 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை கீழ்கட்டளையில் விநாயகர் சிலையுடன் ‘சந்திரயான் 3’ மாதிரியை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.  மேலும் சென்னை தி நகரில் 208 மைசூர் பாக்கில் செய்த விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.  சென்னை மணலியில் 5000 பிஸ்கட்பாக்கெட்டில் 18 அடி உயரத்தில் தேசிய கொடி நிறத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.  சேலத்தில் பத்தாயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் 14 அடி உயரத்தில் தேங்காய் உள்ளே விநாயகர் இருப்பதுப் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

 

 

 

 

 

Tags: vinayagar chathurthi
Share
Tweet
SendShare
Previous Post

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிப்பு!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies