காங்கிரஸ் இரட்டை வேடம்: அமித்ஷா கடும் தாக்கு!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் இரட்டை வேடம்: அமித்ஷா கடும் தாக்கு!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 06:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை. மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி இருக்கிறார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இம்மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் நேற்று  தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது, பெண்கள் முன்னேற்றத்தில் மோடி தலைமையிலான அரசுக்கு உள்ள முழு ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. இதில் வருத்தம் என்னவென்றால், இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டதை எதிர்க்கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது. மகளிருக்கான சட்டங்களை காங்கிரஸ் காலாவதியாக விடலாம் அல்லது மசோதா தாக்கல் செய்வதை அதன் நட்புக் கட்சிகள் தடுத்திருக்கலாம். திட்டத்தின் பலனை எடுத்துக்கொள்ள அவர்கள் எந்தசெயலில் ஈடுபட்டாலும் காங்கிரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வராமல் இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: CongressattackAmitsha33% reservation
Share
Tweet
SendShare
Previous Post

பண்டிட் ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் பிறந்தநாள்!

Next Post

தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies