5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Sep 22, 2026, 05:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 9, 2023, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் மாதம் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. தனிப் பெரும் கட்சியான காங்கிரஸ், சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020-ம் ஆண்டு சில எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதன் பிறகு, அவர் பா.ஜ.க.வில் சேர்ந்ததால், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்துக்கு நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், கடந்த 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மையை உறுதி செய்ய 1 இடம் குறைந்த நிலையில், பகுஜன் சமாஜ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இம்மாநிலத்தில் பா.ஜ.க. 73 இடங்களைக் கைப்பற்றியது. இம்மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. 15 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி முதல்கட்டமாகவும், 17-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

மிசோராம் மாநிலத்தில் முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றது. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. மீதி இடங்களில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 7 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க., பார்வர்டு பிளாக், சுயேட்சை தலா 1 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிசோராம் மாநிலத்திலும் மிசோ தேசிய முன்னணி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இத்தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

Tags: Election commission5 State ElectionElection Date
Share
Tweet
SendShare
Previous Post

போடி மெட்டு-மூணாறு சாலை: அக்டோபர் 12-ல் நிதின் கட்கரி திறப்பு!

Next Post

2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies