பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .
Sep 13, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி நமக்குத் தேவை!-குடியரசு தலைவர .

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 08:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியாயமான மற்றும் நெகிழ்வான உணவு முறைகளை நோக்கிய வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்.

சி.ஜி.ஐ.ஏ.ஆர் அமைப்பின் பாலின சம விளைவுகளுக்கான  சான்று  மற்றும் புதிய வழிகளை  உருவாக்கும்  (ஜெண்டர்) தாக்க மேடை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர் ) நடத்தும் ‘வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை, நியாயமான மற்றும் நெகிழ்வான வேளாண் உணவு முறைகளை நோக்கி’ என்ற சர்வதேச ஆய்வு மாநாட்டைத் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, புதுதில்லியில் இன்று (09.10.2023) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், பாலின நீதி என்று வரும்போது, பழமையான அறிவியல் என்று அழைக்கப்படும் விவசாயம் நவீன காலத்திலும் விரும்பப்படுவதைக் காணலாம் என்று கூறினார்.

கொவிட் -19 பெரும்தொற்று, விவசாய உணவு முறைகளுக்கும் சமூகத்தில் கட்டமைப்பு சமத்துவமின்மைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பைக் கொண்டு வந்தது என்று அவர் கூறினார். புலம்பெயர்தலைத் தூண்டிய இந்தத் தொற்றுநோயால் பெண்கள் அதிக வேலை இழப்பை சந்தித்தனர் என்று  கூறினார்.

உலகளாவிய மட்டத்தில், பெண்கள் நீண்ட காலமாக விவசாய உணவு முறைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம் என்று அவர் கூறினார் . விவசாயக் கட்டமைப்பின் மிகக் குறைந்த பகுதியில் தான் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் முடிவெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது என்று அவர் கூறினார். உலகெங்கிலும், அவர்கள் பாரபட்சமான சமூக விதிமுறைகளால் அவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

விவசாய உணவு அமைப்புகளின் முழு தொடரிலும் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது என்றும்,  இந்தச் சூழல் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில்,  சட்டங்கள் மூலம் பெண்கள் அதிக அதிகாரம் பெறுவதை நாம் காண்கிறோம் என்று கூறினார்.

பெண்கள் மேம்பாடு மட்டுமல்லாமல், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியும் நமக்குத் தேவை என்று அவர் தெரிவித்தார். நமது விவசாய உணவு முறைகளை மிகவும் நியாயமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், சமமானதாகவும் மாற்றுவது இந்தப் புவிக்கும், மனிதகுலத்தின் நல்வாழ்விற்கும் முக்கியமானது என்று கூறினார்.

பருவநிலை மாற்றம் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்றும், அதை எதிர்த்து விரைவாக செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், உயிரினங்களின் அழிவு ஆகியவை உணவு உற்பத்தியை சீர்குலைக்கின்றன என்று தெரிவித்தார்.

பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் வேளாண் உணவு முறைகள் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

இலக்குகளை அடைய செயல்பாட்டுக்கேற்ற ஆராய்ச்சி தேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார் . வேளாண் உணவு முறைகளை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த முறையான புரிதல் நமக்குத் தேவை என்று அவர் கூறினார்.

அடுத்த நான்கு நாட்களில் இந்த மாநாடு அனைத்து, பிரச்சினைகளையும் விவாதிக்கும் என்றும், வேளாண் உணவு முறைகளில் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்

Next Post

மொராக்கோவின் மராகேச் நகருக்கு நிர்மலா சீதாராமன் நாளை அரசு முறைப் பயணம்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies