காஸாவிலிருந்து வெளியேறிய 4.50 லட்சம் மக்கள்!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸாவிலிருந்து வெளியேறிய 4.50 லட்சம் மக்கள்!

இஸ்ரேல் கெடுவால் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் 10 லட்சம் மக்களும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்திருந்த நிலையில், 4.50 பேர் வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

காஸா தன்னாட்சி நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத தாக்குதலை நடத்தினர். காலையில் சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணை வீசி இஸ்ரேலை திக்குமுக்காட வைத்தனர். இத்தாக்குதால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காஸா மீது போரை அறிவித்தது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருந்தார்.

இதையடுத்து, காஸா நகரின் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், குண்டு மழை பொழிந்தது. இதில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைமையகம், தீவிரவாதத் தலைவரின் வீடு, மசூதியின் மையப்பகுதியில் இருந்து தீவிரவாத முகாம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், காஸா நகரத்தில் வசிக்கும் 10 லட்சம் மக்களும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேறி, ஐ.நா. அமைத்திருக்கும் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைய வேண்டும் என்று கெடு விதித்திருந்தது.

மேலும், காஸாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் விமானப்படையினர் வானில் இருந்து நோட்டீஸ்களையும் வீசி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காஸா நகர மக்கள் சாரை சாரையாக வெளியேறத் தொடங்கினர். இதுவரை சுமார் 4.50 லட்சம் பேர் வெளியேறி இருக்கின்றனர். இவர்களில் 3 லட்சம் பேர் ஐ.நா. பாதுகாப்பு முகாம்களிலும், 50,000 பேர் பாலஸ்தீன அரசின் நிவாரண முகாம்களிலும், மற்றவர்கள் காஸா நகரின் தெற்கு பகுதியில் மைதானங்களிலும், பொது கட்டடங்களிலும் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் இருக்கும் இஸ்ரேல் விமானப் படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று இஸ்ரேல் அழைப்பு விடுத்திருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது. 7-வது நாளான இன்று தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என இதுவரை 752 கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1948-க்குப் பிறகு இதுவே மிக மோசமாக தாக்குதல் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: WARIsraelHamas
Share
Tweet
SendShare
Previous Post

தேங்க்யூ மோடி – கண்ணீர் விட்ட இஸ்ரேல் இந்தியர்கள்!

Next Post

கோவை மார்ட்டின் வீட்டில் 2-வது நாளாகச் சோதனை – ஏன்? எதற்கு?

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies