மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!
Sep 12, 2026, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!

விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் இன்றியமையாதவையாக உள்ளன!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் சமகால சீன ஆய்வுகளுக்கான மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ‘விண்வெளி – உலகளாவிய தலைமைக்கான தேடலில் சீனாவின் இறுதி எல்லை’ என்ற தலைப்பில் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேந்திர சிங், “வெளிப்படைத் தன்மை, பொறுப்புடமை மற்றும் விண்வெளியின் அமைதியான பயன்பாடு ஆகிய கொள்கைகளை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

சீனா உள்பட அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுடன் வெளிப்படையான உரையாடலில் ஈடுபட வேண்டும். இதனால் நாம் ஒருவருக்கொருவர் நோக்கங்கள், முயற்சிகளை ரகசியமாகவோ அல்லது சந்தேகமாகவோ இல்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் பாதுகாப்பான, நீடித்த சூழலைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும் முடியும்.

இந்தியாவின் விண்வெளித் திட்டம் உலகளவில் போட்டியிடக்கூடிய அளவுக்கு சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் முற்றிலும் அமைதியானது. சாதாரண குடிமக்களுக்கு ‘வாழ்க்கையை எளிதாக்க’ உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்களுடன் இஸ்ரோ ஒத்துழைப்பை அளித்து வருகிறது.

மனித சமுதாயத்தின் பரந்த நன்மைக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகளை இந்தியா ஆதரிக்கிறது. விண்வெளி அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மோதல்கள் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவும் அப்போதைய சோவியத் ஒன்றியமும் 1969 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு மனிதனை தரையிறக்குவதற்கு முன்பே தங்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியிருந்தன. எனினும், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை உலகுக்கு அளித்தது நமது நாட்டின் சந்திரயான்தான்.

இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் மனித வளங்கள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தோல்வியடைந்த ரஷ்யாவின் நிலவு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால், சந்திரயான்-3 திட்டத்துக்கு ரூ.600 கோடி மட்டுமே செலவானது.

பிரதமர் விரைவு சக்தி, ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் நவீன நகரங்கள், வேளாண்மை, நீர்வள வரைபடம், தொலை மருத்துவம் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு துறைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் இன்றியமையாதவையாக உள்ளன. இதன்மூலம், சாமானிய மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: Central Ministerjitendra singhNASA
Share
Tweet
SendShare
Previous Post

இனிப்பு விற்க இலக்கு: ஆவின் பாலகங்களுக்கு நெருக்கடி!

Next Post

தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியிடம் பிரதமர் மோடி ஆசி கோரினார்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies