நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!
Sep 13, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் குட்டிக்கு நூரி என்று பெயர் வைப்பதா? ராகுலுக்கு எதிராக வழக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்து, தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒருவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இம்மாதத் தொடக்கத்தில் கோவா மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, அம்மாநிலத்தைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே, அவரது கணவர் ஸ்டான்லி பிரகன்கா ஆகியோரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தைச் சேர்ந்த நாய்க் குட்டி இருப்பதை அறிந்தார்.

இதையடுத்து, நூரி என்று பெயரிடப்பட்ட பெண் நாய்க்குட்டியை வாங்கி வந்த ராகுல் காந்தி, அதை உலக விலங்குகள் தினத்தன்று தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவர் முகமது ஃபர்ஹான். இவர்தான் நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டதற்காக ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து முகமது ஃபர்ஹான் கூறுகையில், “நாயின் பெயர் எனது மத உணர்வுகளை புண்படுத்துகிறது. ஏனெனில், ‘நூரி’ என்ற வார்த்தை இஸ்லாத்துடன் தொடர்புடையது. மேலும், குரானிலும் நூரி என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, ராகுல் காந்தி நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, ஃபர்ஹானின் வழக்கறிஞர் முகமது அலி கூறுகையில், “ஐ.பி.சி. பிரிவு 295 ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்) சட்டப் பிரிவின் கீழ் ராகுல் காந்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அவிரல் சிங் நீதிமன்றத்தை அணுகினோம்.

நாயின் பெயர் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள், ராகுல் காந்தியின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் சேனல்களில் இருந்து ஃபர்ஹானுக்கு தெரியவந்தது. எனவே, நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் ராகுல் காந்திக்கு ஃபர்ஹான் அறிவுறுத்தினார்.

ஆனால், ராகுல் காந்தியிடமிருந்து எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை. எனவே, நவம்பர் 8-ம் தேதி ஃபர்ஹானின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. புகாரை விசாரித்த பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பலாம்” என்றார். ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஃபர்ஹான் நீதிமன்றத்தை அணுகியதை, உரிமையியல் நீதிமன்றம் அலுவலகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

Tags: rahul gandhiDog Name nooriAIMIM leaderMove court
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமருக்கு எதிரான பேச்சு: சரத் பவாருக்கு நிதின் கட்கரி பதிலடி!

Next Post

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies