பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!
Sep 13, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூபேஷ் பாகல் ஒரு ப்ரீ பெய்டு முதல்வர். பணம் தீர்ந்துபோனால் எப்படி ப்ரீ பெய்டு சிம்கார்டு வேலை செய்யாதோ, அதேபோல இந்த முதல்வர் பதவிகாலமும் பணம் தீர்ந்து விட்டால் முடிந்து விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஆகவே, இரு கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மாநில பா.ஜ.க. அலுவலகமான குஷாபாவ் தாக்கரே வளாகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமித்ஷா, விஜய் சங்கல்ப மெகா பேரணியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மக்களை சூறையாடுகிறார். தனது அரசியலை வளர்க்க நினைப்பவரால் சத்தீஸ்கர் மாநிலத்தின் நலனை செய்ய முடியாது. மேலும், பாகல் காங்கிரஸ் கட்சியின் ‘ப்ரீ பெய்டு முதல்வர்’. பணம் தீர்ந்து விட்டால் எப்படி ப்ரீ பெய்டு சிம்கார்டு வேலை செய்யாதோ, அதேபோலத்தான் இந்த முதல்வர் காலமும். பணம் தீர்ந்து விட்டால் வேலை செய்ய மாட்டார்.

நீங்கள் அனைவரும் வாக்களிக்கச் செல்லும்போது, ​​எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுக்கவோ, எம்.எல்.ஏ.வை அமைச்சராக்கவோ வாக்களிக்காதீர்கள். உங்கள் வாக்கு சத்தீஸ்கரின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. ஆகவே, நக்ஸலிசத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆதிவாசிகளையும் மாநிலத்தையும் வளர்ந்த பிரதேசமாக மாற்ற வேண்டும் என்பதற்கானதாக உங்கள் வாக்கு இருக்க வேண்டும்” என்றார்.

Tags: ChhattisgarhAmit sha
Share
Tweet
SendShare
Previous Post

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம்!

Next Post

“இண்டி” கூட்டணி சிதைந்து விட்டது: சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies