பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!
Sep 22, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம்தான். பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும், 17-ம் தேதியும் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்கலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் ஜஷ்பூர் மாவட்டம் ராய்கரில் உள்ள லைலுங்காவில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அவரை வரவேற்க கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, நட்டா பாரம்பரிய டிரம்மை வாசித்து மகிழந்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய நட்டா, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல் 3,100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். பெண்களுக்கு ஆண்டுக்கு தலா 12,000 ரூபாய் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி சுரங்கம் மற்றும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கிறது.

பொய்களைச் சொல்லி காங்கிரஸ் ஊழல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம், வஞ்சகம். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊழல் இருக்கும் என்பதுதான் அவர்களின் அடையாளம். ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது.

பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, 2027-28-ம் ஆம்டுக்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்” என்றார்.

Tags: J.P.NaddaChhattisgarh
Share
Tweet
SendShare
Previous Post

தர்மமே வெல்லும் என்ற தத்துவத்தை நிலைநிறுத்திய நீதியரசர்களுக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies