ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
Jul 30, 2026, 11:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். முதல் ஓவரில் இந்திய அணி தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடியது.  சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 6 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ரிங்கு சிங் நிதானமாக விளையாடி வந்தார். இவருடன் விளையாடி வந்த ருத்ராஜ் 28 பந்துகளில் 32 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார். ஜித்தேஷ் மற்றும் ரிங்கு சிங் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தது. இறுதியாக ஜித்தேஷ் சர்மா 1 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 19 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 29 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பேன் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்களும், ஜசோன் மற்றும் தன்வீர் தலா 2 விக்கெட்களும் ஆரோன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் களமிறங்கினர்.

4 வது ஓவரில் ஜோஷ் 8 ரன்களுக்கும் 5 வது ஓவரில் டிராவிஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஆரோன் 8 ரன்களுக்கும் டெர்மோட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 36 ரன்களும், மேட் ஷாட் 22 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அக்சார் படேல் 3 விக்கெட்டும், தீபக் 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்களை வீழ்த்திய அக்சார் படேலுக்கு வழங்கப்பட்டது.

Tags: Indiat20Raipuraustriliaindia wonindia won seires
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.74 அடியாக அதிகரிப்பு

Next Post

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies