அஸ்ஸாமில் பூர்வகுடி முஸ்ஸீம்கள் கணக்கெடுப்புக்கு அனுமதி!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்ஸாமில் பூர்வகுடி முஸ்ஸீம்கள் கணக்கெடுப்புக்கு அனுமதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 09:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பழங்குடி முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்புக்கு, மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 34 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லீம்களைக் கொண்டுள்ளனர். இது ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகளுக்கு அடுத்ததாக அனைத்து யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 3-வது இடமாகும்.

மேலும், மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான 31 மில்லியனில், 10 மில்லியனுக்கும் அதிகமானோர் முஸ்லீம்கள். எனினும், சுமார் 4 மில்லியன் மக்கள் மட்டுமே அஸ்ஸாமி மொழி பேசும் பூர்வீக முஸ்லிம்கள். மீதமுள்ளவர்கள் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்தோர். அதாவது, வங்காளதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

இந்த சூழலில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா தலைமையிலான அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் பழங்குடி முஸ்லீம் சமூகங்களின் சமூக பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்களை அறிவித்தது.

இது தொடர்பாக, ஹிமந்தா பிஸ்வாஸ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இந்த கணக்கெடுப்பு மாநிலத்தின் பழங்குடி சிறுபான்மையினரின் விரிவான சமூக அரசியல் மற்றும் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்ட பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு வழிகாட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

கோரியா, மோரியா, ஜோலா (தேயிலை தோட்டங்களில் வசிப்பவர்கள் உட்பட), மற்றும் தேசி, சையத் (அஸ்ஸாமி மொழி பேசும்) சமூகங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசால் பூர்வீக அஸ்ஸாமிய முஸ்லீம்களாக வகைப்படுத்தப்பட்டன. அஸ்ஸாம் முஸ்லீம்கள் பழைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்தோ அல்லது தற்போதைய வங்காளதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த வரலாறு இல்லை.

முன்னதாக, மாநில அரசால் அமைக்கப்பட்ட 7 துணைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 5 துணைக் குழுக்களை பழங்குடியினராக அடையாளம் காணும் முடிவை அரசு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags: MuslimAssamCM himanta biswa sarma
Share
Tweet
SendShare
Previous Post

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஈரான் சிறையில் உண்ணாவிரதம்!

Next Post

பாரதியை சுமப்போம்! நல்லதை விதைப்போம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies