எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! - தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! – தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வாரியம் தோனிக்கு மரியாதையை அளிக்கும் விதமாக தோனியின் ஜெர்சி எண் 7-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இனி எந்த வீரருக்கும் ஜெர்சி எண் 7 வழங்கப்படாது.

இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல் நல்ல மனிதராகவும் நம் அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர்.

இந்திய கிரிக்கெட் அணி அடிமட்டத்திலிருந்த போது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கபில்தேவ். அவருக்குப் பின்னர் இந்தியாவால் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்ட போது,   2007 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றில் கூட வெற்றி பெறாமல் வெளியே வந்தது.

அப்போது முதன் முதலாக அறிமுகமான டி20 உலகக்கோப்பையில் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாது என்று அனைவரும் நினைத்த நேரத்தில் 2007  டி20 உலகக்கோப்பையை மகேந்திர சிங் தோனி வென்று கொடுத்தார்.

அப்போது இந்திய கிரிக்கெட் மீண்டும் புத்துயிர் பெற்று தலை நிமிர ஆரம்பித்தது. அதன்பிறகு 28 வருடங்கள் கழித்து 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.

அதன் பின்னர் 2013 சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 என்று தோனி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளையும், மகுடங்களையும் வென்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் நிரந்தர வீரராக இருந்தவர் தோனி.

ஒருநாள் கிரிக்கெட்டில் 350 போட்டிகள் விளையாடி 10,773 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களையும் விளாசியுள்ளார். இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் என இரு தரப்பையும் தோனி ஒற்றை ஆளாகக் கையாண்டது இன்று வரை ஆச்சரியம் தான்.

பேட்டிங் மட்டும் இல்லாமல் அவரது விக்கெட் கீப்பிங்கு நிகர் அவரே என்பது ஆச்சரியம் இல்லை. ஐசிசி பொறுத்தவரை DRS என்றால் டிசிஷான் ரிவிவ் சிஸ்டம் ( decision review system ) ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை தோனி ரிவிவ் சிஸ்டம் ( Dhoni review system ).

அதன் காரணமாகவே தோனி இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களை அணிக்குள் நிரந்தர வீரராக மாற்றியதிலும் தோனியின் பங்கு உள்ளது.

அதேபோல் சரியான நேரத்தில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடிய பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது.

இதனாலேயே தோனியின் ஜெர்சியின் எண் 7 ரசிகர்களிடையே உணர்வுப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. தோனி ஓய்வுபெற்றாலும் ஜெர்சி எண் 7 இதுவரை எந்த வீரருக்கும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜெர்சி எண் 7-க்கு ஓய்வு கொடுத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இனி தோனி பயன்படுத்திய ஜெர்சி எண் 7 எந்த வீரருக்கும் அளிக்கப்படாது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண்10-க்கு ஓய்வு கொடுத்து பிசிசிஐ அறிவித்தது.

அதன்பின் தோனியின் ஜெர்சியான எண் 7-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இது பிசிசிஐ தரப்பில் தோனி அளிக்கப்பட்ட மரியாதையாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஓய்வுக்குப் பின் பிசிசிஐ நிகழ்ச்சியில் பங்கேற்காத தோனிக்கு மரியாதை தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்.

Tags: iccworldcupBCCIms dhoni cricket
Share
Tweet
SendShare
Previous Post

பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!

Next Post

தபால் அலுவலக மசோதா மக்களவையில் இன்று பரிசீலனை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies