ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர்! - அண்ணாமலை
Sep 12, 2026, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்? எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில், அரசுப் பேருந்துகள் நிறுத்திச் செல்வது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய ஒப்பந்தம், இன்று வரையில் நடைபெறாமல் இருப்பதால், பெரும் முதலீடு செய்துள்ள நெடுஞ்சாலை உணவகம் நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில், அரசுப் பேருந்துகள் நிறுத்திச் செல்வது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய ஒப்பந்தம், இன்று வரையில் நடைபெறாமல் இருப்பதால், பெரும் முதலீடு செய்துள்ள நெடுஞ்சாலை உணவகம் நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.… pic.twitter.com/7XFrC7knJI

— K.Annamalai (@annamalai_k) December 15, 2023

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், அவரது உதவியாளர்களும், பல உணவக உரிமையாளர்களிடம் லஞ்சம் வசூலித்து, அவர்கள் உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதியாக, இந்த ஒப்பந்தங்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக நெடுஞ்சாலைகளில் உணவகம் நடத்தி வந்தவர்களும், அதனைச் சார்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து பலமுறை அமைச்சரையும், அதிகாரிகளையும் தொடர்பு கொண்டும், எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஒரு ஊடகவியலாளர் வாயிலாக, இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் உணவக உரிமையாளர்கள் எழுப்பியிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அந்த உணவகங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளார். இரண்டு உணவகங்களின் உரிமங்கள் இது வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

லஞ்சம் வாங்கிய உதவியாளர்கள் மீதும், ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் தள்ளிப் போடும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் அமைச்சரின் இந்த முடிவு, ‘அமைச்சர் உள்ளிட்டோர் தவறு செய்தால், கண்டும் காணாமல் இருக்க வேண்டும், அவற்றைப் பொதுவெளியில் சொன்னால், புகார் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்போம்’ என்று, அனைவருக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே தெரிகிறது.

ஏற்கனவே ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்? அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் என்பதை அமைச்சர் உணர்ந்தால் நலம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp k annamalaidmk fails
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலை சீசன்: தாம்பரம் – கொல்லம் இடையே சிறப்பு இரயில்!

Next Post

வாரணாசி செல்லும் முதல் குழுவை வழி அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies