காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா... பா.ஜ.க. பதிலடி!
Jul 29, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா… பா.ஜ.க. பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 10:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிரட்டல் விடுத்திருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தான் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவதுபோல பாசங்கு செய்து பாகிஸ்தான் முதுகில் குத்தி வருகிறது.

இந்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.யும்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்தினால்தான், இரு நாடுகளும் வளர்ச்சியடைய முடியும்.

இந்தியாவால் தனது நண்பர்களை மாற்றிக் கொள்ள இயலும். ஆனால், அண்டை நாடுகளை மாற்றிக் கொள்ள இயலாது என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்ப்பாய் கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும்கூட போர் என்பது தீர்வல்ல எனவும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது. அவர், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறார். இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் நிலையே இந்தியாவிற்கும் ஏற்படும்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஹினா ஷபி பட் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. பரூக் அப்துல்லா இப்போதே கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சி பாகிஸ்தானுக்கு முன்னால் தலைகுனியப் போவதில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சித்தோம். ஆனால், அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களை முதுகில் குத்தியுள்ளனர்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags: IndiapakistanThreatenFaruk Abdulla
ShareTweetSendShare
Previous Post

நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!

Next Post

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies