”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! - மத்திய அரசு
Oct 6, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

”பாரத்”அரிசி ஒரு கிலோ ரூ.25! – மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 02:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘பாரத்’ பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மக்களின் முக்கிய உணவான அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து, இரட்டை இலக்க பணவீக்கத்தைக் கொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு அரசியின் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன் படி மத்திய அரசு இனி பாரத் பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் என்று மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு பாரத் பிராண்டின் கீழ் கோதுமை மாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது அரிசி விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டு உள்ளது.

இந்தியத் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே உணவு பணவீக்கத்தைக் குறைக்கும் திட்டத்துடன் மிகவும் குறைந்த விலையில் கோதுமை மாவு மற்றும் பருப்பு வகைகளைப் பார்த் பிராண்டின் கீழ் விற்பனை செய்தது.

நவம்பர் மாதம் தானிய வகைகளின் விலை 10.27% உயர்ந்துள்ளது, உணவுப் பணவீக்கம் நவம்பரில் 8.70% ஆக இருந்தது, முந்தைய மாதத்தில் 6.61% ஆக இருந்தது.

உணவுப் பணவீக்கம் ஒட்டுமொத்த நுகர்வோர் நிதி நிலையைப் பாதிக்கும் காரணத்தால் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பு மக்களின் அடிப்படை பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் முடிவு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள்.

இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) செய்த இணைய-ஏலத்தின் மூலம் வெளிச் சந்தைக்குச் செல்லும் கோதுமை அளவை அதிகரிப்பதன் மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

2024 பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் அரசுக்கு உணவுப் பொருட்கள் மீதான உயர் பணவீக்கம் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தக்க முடிவை மத்தியஅரசு எடுத்துள்ளது.

Tags: central government"Bharat" rice is Rs.25 per kg!
Share
Tweet
SendShare
Previous Post

கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்தியா – ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்!

Next Post

ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம்!

Related News

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies