அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!
Aug 8, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் ஸ்ரீராமர் லல்லா பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22-ம் தேதியை தீபாவளி போல கொண்டாட வேண்டும் என்று கூறியிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கும்பாபிஷேகம் முடிந்து ஜனவரி 25 முதல் மார்ச் 25-ம் தேதி வரை தினமும் 50,000 பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “அயோத்தியில் உள்ள இராமர் கோவிலில் ஸ்ரீராமர் லல்லா பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22-ம் தேதியை நாட்டில் தீபாவளி போல கொண்டாடும் சூழலை பா.ஜ.க.வினர் உருவாக்க வேண்டும்.

அதேபோல, அயோத்திக்கு தரிசனத்திற்காக வரும் ஒவ்வொரு நபருக்கும் பா.ஜ.க. தொண்டர்கள் உதவ வேண்டும். யாரும் சிரமப்படாமல் பாரபட்சமின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஜனவரி 25 முதல் மார்ச் 25-ம் தேதி வரை அயோத்தி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக பா.ஜ.க. பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இப்பிரச்சாரத்தின் மூலம் தினமும் 50,000 பேர் தரிசனம் செய்ய பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்வார்கள்.

மக்கள் தங்கள் சொந்த செலவில் இராமர் கோவிலுக்குச் செல்வார்கள். அதேசமயம், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு உள்ளிட்டவற்றுக்கு பா.ஜ.க. உதவும். மேலும், பக்தர்கள் எளிதில் அயோத்திக்கு செல்லும் வகையில், 430 நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினமும் 35 இரயில்கள் இயக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

இக்கூட்டத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், பா.ஜ.க. பொதுச்செயலாளர் சுனில் பன்சால், மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: bjpJ.P.NaddaExecutive Meeting
Share
Tweet
SendShare
Previous Post

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை!

Next Post

இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies