பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!
Sep 13, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது எபிசோடுக்கு 22.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

“பரிக்ஷா பே சர்ச்சா” என்பது இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி, தேர்வுகள் மற்றும் பள்ளிக்குப் பிறகான வாழ்க்கை குறித்து விவாதிக்கும் ஒரு திட்டமாகும்.

இந்நிகழ்ச்சியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். இந்நிகழ்ச்சி இதுவரை 6 முறை நடந்திருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பிரதமரின் கருத்துகளை கேட்டறிந்து பயன் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2023 டிசம்பர் 11-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை MyGov போர்ட்டலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இவர்களில் 2,050 பேர் கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு பிரதமர் மோடியின் கையெழுத்திடப்பட்ட, இந்தி மற்றும் ஆங்கிலத்திலான தேர்வு வாரியர்ஸ் புத்தகம் அடங்கிய சிறப்பு “பரிக்ஷா பே சர்ச்சா கிட்” மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இது தவிர, இந்த ஆண்டு தனித்துவமான ஊடாடும் திட்டத்தின் மூலம் 4,000 பங்கேற்பாளர்கள் பிரதமருடன் உரையாடுவார்கள் என்றும், டெல்லி பாரத் மண்டபத்தில் டவுன்ஹால் வடிவத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சிக்கு 22.6 லட்சம் பேர் பதிவு செய்திருக்கின்றனர். இது இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiPariksha Pe Charcha7th EditionJanuary 29th
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Next Post

பி.எம்.ஜன்மேன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு நாளை முதல் தவணை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies