பயணிகள் ஹெலிகாப்டர் தயாரிப்பு : டாடா - பிரான்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம்!
Nov 2, 2026, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயணிகள் ஹெலிகாப்டர் தயாரிப்பு : டாடா – பிரான்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் டாடா குழுமமும், பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உள்நாட்டு மற்றும் உள்ளூர்மயமாக்கல் கூறுகளுடன் பயணிகள் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முக்கிய முடிவுகள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அப்போது, இந்தியாவின் டாடா குழுமமும், பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உள்நாட்டு மற்றும் உள்ளூர்மயமாக்கல் கூறுகளுடன் பயணிகள் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.

மேலும், இந்தியாவும் பிரான்ஸும் பாதுகாப்பு தொழில்துறை கூட்டாண்மை சாலை வரைபடத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றன. இது முக்கிய இராணுவ வன்பொருள் மற்றும் தளங்களின் இணை மேம்பாடு மற்றும் இணை உற்பத்தியை வழங்கும். தவிர, விண்வெளி, நிலப் போர், சைபர் ஸ்பேஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எளிதாக்கும்.

இந்தியா – பிரான்ஸ் பாதுகாப்பு தொழில்துறை சாலை வரைபடம் ரோபோட்டிக்ஸ், தன்னாட்சி வாகனங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளிலும்  ஒத்துழைப்பை எளிதாக்கும். செயற்கைக்கோள் ஏவுதலுக்கான ஒத்துழைப்புக்காக நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மற்றும் பிரான்ஸின் ஏரியன் ஸ்பேஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் காஸா போர் மற்றும் தீவிரவாதம், மனிதாபிமான அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் விவாதித்தனர். அதோடு, இரு தலைவர்களும் செங்கடலில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் இடையூறுகள், உண்மையான முன்னேற்றங்கள் பற்றிய முன்னோக்குகளையும் பரிமாறிக் கொண்டனர்” என்றார்.

Tags: FranceIndiaModiAirbus- Tataproducehelicopters
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் தொடர்ந்து மோசமான நிலைக்கு செல்லும் சட்டம் ஒழுங்கு : அண்ணாமலை

Next Post

75-வது குடியரசு தினம் : வெளிநாட்டு தூதர்கள் வாழ்த்து!

Related News

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies