கேலோ இந்தியா: சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய மத்திய அமைச்சர்!
Sep 14, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேலோ இந்தியா: சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய மத்திய அமைச்சர்!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

கடந்த 19-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில், சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவிற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டிருந்த நிலையிலும், இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் சென்னை வந்ததை அவர் குறிப்பிட்டார்.

தென்மாநிலங்களில் நடைபெறும் முதலாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி இது. விளையாட்டுத் துறையில் இந்தியா தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது நிறைவடைந்துள்ள கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 454 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மகளிரின் பங்களிப்பு கிட்டதட்ட சரிசமமாக இருந்தது.

இந்தப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா, இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு, மூன்றாம் இடம் பெற்ற அரியானா ஆகிய மாநிலங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் புதிய தேசிய சாதனைகளைப் படைத்த வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைத்த பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய குடும்ப பின்னணிக் கொண்டவர்கள். இது போன்ற வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தி சாதனைகளைப் படைக்க கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சிறந்த களமாக அமைந்துள்ளன. இது போன்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து உதவிகளை வழங்கி ஊக்குவிக்கும்.

இந்த விழாவின் முக்கிய நாயகர்கள் இளம் வீரர்கள்தான். ஒவ்வொரு பதக்கமும் வீரர்களின் அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இளம் வீரர்கள் தான் இந்திய விளையாட்டுத்துறையின் எதிர்காலம். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

Tags: Khelo indiaAnurag Singh Thakur
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது : நிர்மலா சீதாராமன்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies