கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்க வேண்டும்!
Sep 12, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்க வேண்டும்!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வர் ஸ்டாலின் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இட்லி ஒரு ரூபாய், குடிநீர் பாட்டில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் A.N.S..பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகருக்கு வெளியே கிளாம்பாக்கத்தில், பொங்கல் பண்டிகைக்கு முன்பு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட ‘கலைஞர் நூற்றாண்டு புறநகர் பேருந்து நிலையம்’, சென்னை மாநகருக்கு வந்துச் செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.

சாதாரணமாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வீடு கட்டினாலே, அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்திருக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன்தான் கட்டுவார்கள்.

ஆனால், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை 25 ஆண்டுகளுக்குள்ளாகவே மாற்றி இருக்கிறார்கள். சென்னை புறநகர் பேருந்து நிலையம் என்பது, சென்னை மாநகர் மற்றும் புறநகர் மக்களுக்கானது மட்டுமல்ல. தமிழகத்தில் வசிக்கும் எட்டு கோடிக்கும் அதிகமான மக்களும் என்றாவது ஒருநாள் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டிய பேருந்து நிலையம்.

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த சென்னை புறநகர் பேருந்து நிலையம், தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதற்கு மாற்றாக, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஆனாலும், சென்னை மாநகருக்கு வெளியே கோயம்பேட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கிளாம்பாக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய போதே, அங்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும்.

2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகாவது மெட்ரோ ரயில் நிலையத்திற்கான பணிகளைத் தொடங்கி முடித்திருக்க வேண்டும். ஆனால் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்காமலேயே புதிய பேருந்து நிலையத்தை திமுக அரசு அவசர அவசரமாக திறந்து வைத்துள்ளது.

இதுவே பிரச்னைக்கு முக்கிய காரணம். புதிய பேருந்து நிலையத்தையும் மெட்ரோ ரயில் நிலையத்தையும் ஒரே நேரத்தில் திறந்திருந்தால் மக்களுக்கு இவ்வளவு சிரமம் இருந்திருக்காது.

ஆனால், தமிழகத்தை ஆண்ட கட்சியும், இப்போது ஆளும் கட்சியும் மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தங்களின் சுய லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டதால் தான் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளுடன், நள்ளிரவிலும் நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

புறநகர் பேருந்து நிலையம் போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அது குறைந்தது 100 ஆண்டுகளாவது பயன்பாட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்.

ஆனால், மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் அதில் தங்களுக்கு என்ன லாபம், தங்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே யோசித்து திட்டமிடுவதால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் இணைந்து திமுகவை தெருவில் இழுத்து விட்டிருக்கிறார்கள். தினம் தினம் பேருந்து நிலையத்தில் மக்களை அலைகழிக்கிறார்கள்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள், திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் தான் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் தமிழக மக்கள் படும் கொடும் துயரம் இப்போதைக்கு தீரப் போவதே இல்லை. ஆனால், போக்குவரத்து துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும் வீண் வதந்தி பரப்புகிறார்கள், மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கிளாம்பாகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வரும் வரை, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சனை ஓரளவுக்காவது குறையும்.

தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கும் இரு அமைச்சர்களையும் நம்பாமல், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்து, இந்த விஷயத்தில் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உடனடியாக நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான விலையை திமுக கொடுக்க வேண்டி இருக்கும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு இட்லி ரூபாய் 25க்கு விற்கப்படுகிறது. ஒரு இட்லியின் விலையே 25₹ ரூபாய் என்றால், மற்ற பொருட்களின் விலையை பற்றி கேட்க வேண்டியது இல்லை.

அமைச்சர்களுக்கு லஞ்சப் பணத்தை கொடுத்து, கடைகளை எடுத்தவர்கள், சட்டத்திற்கு புறம்பாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அனைத்து பொருட்களையும் மிக அதிக விலைக்கு விற்பதை தமிழக அரசு தடுத்து நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். மேலும் கிளாம்பாக்கம் மட்டுமல்ல அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpKoyambedu bus station
Share
Tweet
SendShare
Previous Post

8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு!

Next Post

மொரீஷியஸ், இலங்கையில் யுபிஐ சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies