மொரீஷியஸ், இலங்கையில் யுபிஐ சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Sep 12, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொரீஷியஸ், இலங்கையில் யுபிஐ சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை சேவைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைத்தனர். அப்போது UPI சேவை பயன்பாடு தொடங்குவதை நேரில் பார்த்தனர். மொரிஷியஸிலும் ரூபே கார்டு சேவை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான நாள். வரலாற்று உறவுகள் நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு வருகின்றன என்றார். மக்களின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்கு இது சான்றாகும்.Fintech இணைப்பு மூலம்,எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, எல்லை தாண்டிய இணைப்புகளும் பலப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவின் கூட்டாளிகளை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் யுபிஐ தற்போது ஒன்றிணைத்துள்ளது என்றும் அவர் கூறினார். UPI சேவைகளால் இலங்கை மற்றும் மொரிஷியஸ் பயனடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறிய கிராமத்தில் உள்ள சிறிய உரிமையாளர்கள் கூட  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துகிறார்கள், ஏனெனில் அதில் வசதியும் வேகமும்  உள்ளது.முழு பிராந்தியத்திலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியே நமது இலக்கு  என்று மோடி கூறினார். இந்தியா தனது வளர்ச்சியை அண்டை நாடுகளின்  நண்பர்களிடம் இருந்து தனித்து பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கோவிட் தொற்றின் போது COWIN தளத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நடத்தியது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால்,  வெளிப்படைத் தன்மை அதிகரித்து, ஊழலைக் குறைத்து, பொருளாதாரத்தையும்  உள்ளடக்கியதாக மாறி வருகிறது என்றார் பிரதமர். முன்னெப்போதும் இல்லாத  வகையில் தற்போது மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது. இலங்கையில் உள்ள அருங்காட்சியகங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தென்னிந்திய நாணயங்கள், மற்றும் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் உள்ளன. கிராமங்களில் கூட தென்னிந்திய வர்த்தக நிறுவனங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்ததை இது காட்டுவதாக ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

இன்றைய முயற்சியானது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமே மேம்படுத்துவதாக அவர்  கூறினார். அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதால், இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலும் இது பயன்படுத்தப்படும் என அவர்  தெரிவித்தார். ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து  தெரிவித்தார்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தனது உரையில், இந்தியாவும் மொரிஷியஸும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வலுவான கலாச்சார, வணிக மற்றும்  மக்களிடையேயான தொடர்புகளை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த உறவில்  இன்று இன்னொரு பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Tags: Ranil wickremesingheRuPay card servicesPrime Minister of Mauritius Pravind JugnauthPM ModiIndiaupimauritiussri lanka
Share
Tweet
SendShare
Previous Post

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்க வேண்டும்!

Next Post

அயோத்தியில் கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோர் சாமி தரிசனம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies