இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 04:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் பிரதமர் மோடி உடன்  கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவிற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் பிரதமர்  மிட்சோடாகிஸ் நேற்று இரவு புதுதில்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தகக் குழு ஒன்றும் வந்துள்ளது.

புதுதில்லியில் இன்று முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் 9வது ரைசினா உரையாடலில் மிட்சோடாகிஸ் தலைமை விருந்தினராகவும், முக்கியப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்க்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

முன்னதாக டெல்லியில் உள்ள  மகாத்மா காந்தி நினைவுமண்டபத்தில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது மனைவி மரேவா கிராபோவ்ஸ்கி-மிட்சோடாகிஸ் ஆகியோர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசும் டெல்லியில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர்  மோடி,

இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். விவசாயம், மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், திறன் போன்ற புதிய வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் இடம் குறித்துஇந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டன எனத் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்தும், இணைப்பும் தான் அதிக முன்னுரிமை அளிக்கும் பகுதிகள். தற்காப்பு கூட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தி இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று அவர் கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்,

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்தவும், அதை மூலோபாய நிலைக்கு மேம்படுத்தவும் இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன எனத் தெரிவித்தார். விவசாயம், சுற்றுலா மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேசியதாக கூறினார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

எப்புடி? – ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS

Next Post

சென்னை மக்களே உஷார்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies